Search

Rebecca

Nov 9, 2025

உள்ளூர்

புத்தளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

புத்தளம், முல்லைநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து சுமார் 3 கிலோ கிராம் 'ஐஸ்' போதைப்பொருளைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All