Search

Nov 23, 2025

உள்ளூர்

திருமண பந்தத்தில் இணைந்துக்கொண்டார் ஜீவன் தொண்டமான்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்றைய தினம் (23) திருமண பந்தத்தில் இணைந்துக்கொண்டார்.

இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை கரம்பிடித்து திருமண பந்தத்தில் இணைந்துக்கொண்டார்.

குறித்த திருமண நிகழ்வு திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பல இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் இ.தொ.கா பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All