Search

Rebecca

Nov 3, 2025

உள்ளூர்

கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில் விபத்து

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற புலத்திசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் வம்பொல ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

ரயில் மீது முச்சக்கர வண்டியொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் பின் இருக்கையில் பயணித்திருந்த இரண்டு பெண்கள் பலத்த காயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து முச்சக்கரவண்டி சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All