Search

Rebecca

Nov 13, 2025

உள்ளூர்

திருகோணமலை - புத்தளம் பிரதான வீதி விபத்து

திருகோணமலை - புத்தளம் பிரதான வீதியின் கிதுல்வுதுவ பகுதியில் இன்று (13) காலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மொரவெவயிலிருந்து தம்பலகமுவ நோக்கிச் சென்ற பேருந்துடன்  மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரபத்தன, கப்புகொல்ல பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளதுடன் பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All