Search

Rebecca

Nov 11, 2025

உள்ளூர்

பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையங்களை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

நாடு முழுவதும் பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டின் பொது போக்குவரத்தினை செயற்திறன்மிக்க துறையாக மாற்றியமைப்பது அரசாங்கத்தின் கொள்கையாகும்.

Transit cities இடங்களிலிருந்து பிரதான நகரங்களுக்கு செயற்திறன் மிகு போக்குவரத்து சேவையை ஆரம்பிக்கும் வகையில் தேவையான வசதிகளுடன் கூடிய பல்நொக்கு போக்குவரத்து மத்திய நிலையங்களை ஸ்தாபிப்பதற்கான தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் பஸ், ரயில், வாடகை வாகன சேவை போன்ற போக்குவரத்து ஊடக ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கில் அதிக பயணிகளின் பயன்பாட்டிற்கு உட்பட்டுள்ள பஸ் தரிப்பிடங்கள் மற்றும் ரயில் நிலையங்களை ஒன்றிணைத்து ஆய்வொன்றை மேற்கொள்ளவும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கண்டி, அனுராதபுரம், கோட்டை ரயில் நிலையம், மொரட்டுவை, ராகமை, அவிஸ்ஸவாளை, கம்பஹா, கட்டுநாயக்கா, களுத்துறை, காங்கேசன்துறை உள்ளிட்ட இடங்களில் இந்த பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையங்களை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All