Search

Rebecca

Nov 26, 2025

உள்ளூர்

சிவனொளிபாத தளத்தை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

சிவனொளிபாத தளத்தின் சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதையும், யாத்திரிகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 'க்ளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டம், சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, இந்த ஆண்டு சிவனொளிபாத யாத்திரை காலம் தொடங்குவதற்கு முன்பு, சிவனொளிபாத மலையின் புனிதப்பிரதேசம் உட்பட செல்வதற்கு கடினமான பகுதிகளில் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்றி, குறித்த சூழல் கட்டமைப்பை பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் மூலம் மீண்டும் மாசடைவதைத் தடுக்கவும் கூட்டு வேலைத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இலங்கை இராணுவம் மற்றும் விஷேட அதிரடிப்படையின் தலைமையிலான இந்த 'சிறப்பு நடவடிக்கை" நவம்பர் 29 வரை நடைபெறவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கடைசி நாளான நவம்பர் 29ஆம் திகதி, நல்லதன்னி மற்றும் பலாபத்தல நுழைவாயில்களில் “க்ளீன் ஸ்ரீலங்கா ஒரு நாள் சிரமதான வேலைத்திட்டம்” சுமார் 3000 பேர் பங்கேற்புடன் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All