Search

Rebecca

Nov 4, 2025

உள்ளூர்

எதிர்க்கட்சித் தலைவர் இந்திய நிதியமைச்சருடன் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புதுடில்லியில் உள்ள இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தார்.

சஜித் பிரேமதாச இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பவற்றை ஆழப்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு புதுடில்லியில் அமைந்துள்ள நிதி அமைச்சில் இன்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இங்கு இந்திய நிதியமைச்சர் இலங்கையின் இயற்கை அருட்கொடைகள் மற்றும் மனித திறைமைகள் தொடர்பில் பாராட்டி தனது பேச்சை ஆரம்பித்த அவர், இந்தியாவின் மாறிவரும் பொருளாதாரத்துடன் நெருக்கமாக ஈடுபடுவதன் மூலம் இந்த பலங்களைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் தொடர்பில் பிரஸ்தாபித்தார்.

அவ்வாறே, இந்தியா போன்ற பெரிய சந்தை வாய்ப்புகளை அணுகுவதன் மூலம் இலங்கையின் தொழிற்துறையை வேகமாக முன்னேற்றம் காணச் செய்ய முடியும் என குறிப்பிட்டார்.

வலுவான உள்நாட்டு தொழிற்துறைகள் மூலம் இலங்கையின் பொருளாதார இறையாண்மையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All