Search

Rebecca

Nov 12, 2025

விளையாட்டு

3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் பாகிஸ்தான் முன்னிலை

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்து, துடுப்பெடுத்தாட பாகிஸ்தான் அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அந்த அணி சார்பில் சல்மான் ஆகா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 105 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். ஹசைன் தலாத் 62 ஓட்டங்களையும், மொஹமட் நவாஸ் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன்படி, 300 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 59 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ஹாரிஸ் ரவூஃப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன்படி, 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp