Search

Rebecca

Nov 23, 2025

பல்சுவை

பிரபஞ்ச அழகி 2025 பட்டத்தை வென்றார் பாத்திமா போஷ்

மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்த பாத்திமா போஷ் 2025ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

இந்த ஆண்டு பிரபஞ்ச அழகி போட்டி, 74ஆவது ஆண்டாக, தாய்லாந்தில் உள்ள இம்பாட் சேலஞ்சர் ஹால் இல் நடைபெற்றது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இதில் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு வெற்றியாளரான டென்மார்க் நாட்டைச் சேர்ந்த விக்டோரியா கஜேர் தீல்விக்கிடம் இம்முறை அழகி பட்டத்தை வென்ற மெக்சிக்கோவின் பாத்திமா போஷ் கிரீடத்தைப் பெற்றுக்கொண்டார்.

தாய்லாந்தின் வீனா பிரவீனர் சிங் இரண்டாம் இடத்தை பிடித்தார். பாத்திமா போஷின் வெற்றிக்கு சமூக வலைதளங்களில் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

போட்டிக்குப் பிறகு, சில தினங்களுக்கு முன்பு பாத்திமா போஷ் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. போட்டியின் மேற்பார்வையாளர் நவத் இட்சராகிரைஸ் அவர் மீது அவமரியாதை செய்ததாக கூறப்பட்டது.

விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததற்காக அவர் பாத்திமாவை “முட்டாள்” என்று அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாத்திமா, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஏனைய போட்டியாளர்கள் இந்த நிலைமைக்கு கோபம் தெரிவித்தனர்.

ஊடகவியலாளர்களை சந்தித்த போது பாத்திமா போஷ் கூறியதாவது:

“நவத் செய்தது மரியாதையான செயல் அல்ல. அவர் என்னை முட்டாள் என அழைத்தார். உலகம் இதை பார்க்க வேண்டும் என்பதற்காக உங்களிடம் சொல்கிறேன்” இந்த தைரியமான பேட்டி மெக்சிக்கோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பா உள்ளிட்டோரால் பாராட்டப்பட்டது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp