Search

Rebecca

Nov 18, 2025

உள்ளூர்

மருந்து வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை

மருந்து வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (18) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் 350 மருந்து வகைகளுக்குக் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் என்றும், அந்த வர்த்தமானி அறிவித்தலைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராகச் சட்டம் அமுலாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த அறிவித்தல், தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் பதிவு செய்யப்படவுள்ள மருந்துகளுக்கும் பொருந்தும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All