Search

Rebecca

Nov 17, 2025

உள்ளூர்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு - மற்றுமொரு பெண் கைது!

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 7ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின்போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண், வெளிநாட்டில் வசிக்கும் குற்றக்கும்பலைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்பைப் பேணி, சந்தேக நபர்களுக்கு காரொன்றை வழங்கியமை மற்றும் கொலை செய்யப்பட்டவர் பயணித்த வீதி பற்றிய தகவல்களை வழங்கியமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு 13, ஆட்டுப்பட்டித் தெருவைச் சேர்ந்த 32 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All