Search

Nov 24, 2025

உள்ளூர்

கொழும்பு - கண்டி வீதி திறப்பு தொடர்பில் அமைச்சர் தகவல்

கடுகண்ணாவை, கனேதென்ன மண்சரிவு இடம்பெற்ற பகுதியை பரிசோதனைக்கு உட்படுத்தும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த மண்சரிவில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக கொழும்பு - கண்டி வீதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடுகண்ணாவை மண்சரிவு தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்னாயக்க இன்று பாராளுமன்ற அமர்வின் போது கருத்து தெரிவித்தார்.

மூடப்பட்டுள்ள வீதியின் ஒரு மறுங்கு ஓரிரு நாட்களில் வாகனப் போக்குவரத்திற்கென திறக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் இந்த விடயம் மிகவும் பாரதூரமாக உள்ள நிலையில் இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இறுதி அறிக்கையொன்றை தயாரிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All