Search

SEGU

Nov 22, 2025

உள்ளூர்

கடுகன்னாவ மண்சரிவு - உயிரிழப்பு 2 ஆக உயர்வு

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மற்றுமொரு நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, காயமடைந்த நான்கு பேர் மாவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மண் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்து காரணமாக, கனேதென்ன சந்தியிலிருந்து கடுகன்னாவ வரையான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் ரம்புக்கனை - கலகெதர ஊடாக கண்டிக்கும்இ கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் இதே மாற்று வீதி ஊடாகவும் பயணிக்க முடியும்.

கம்பளையிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் கொழும்பிலிருந்து கம்பளை செல்லும் வாகனங்கள் மாவனெல்ல - ஹெம்மாத்தகம ஊடான மாற்று வீதியைப் பயன்படுத்த வேண்டும்.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் இயலுமானவரை அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் சாரதிகளுக்கும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All