Search

Rebecca

Nov 7, 2025

உள்ளூர்

திடீர் சோதனையில் சிக்கிய போதைப்பொருள் : 9 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தீடீர் சோதனை நடவடிக்கைகளின்போது குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 2 பேரும் பகுதி பகுதியாக ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 7 பேரும் என 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதான சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All