Search

Rebecca

Nov 19, 2025

உலகம்

கால்பந்து தொடரை காண வருவோருக்காக விசா கட்டுப்பாடுகளை தளர்த்தும் டிரம்ப்

அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடரை காண வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அமெரிக்க விசா வழங்கப்படும் என டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.

வழக்கமாக அமெரிக்க விசா நேர்காணலுக்காக வெளிநாட்டினர் மாத கணக்கில் காத்திருக்கும் நிலையில், கால்பந்து போட்டிகளுக்கான டிக்கெட்களை வைத்திருந்தால் 2 மாதங்களுக்குள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

போட்டிகளை காண ஒரு கோடி பேர் வரை வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவ்வாறு வருவோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கிவிடக்கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All