Search

Rebecca

Nov 17, 2025

உலகம்

சீனா, லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்

சீனாவின் ஜின்ஜியாங் (Xinjiang) நகரில் இன்று அதிகாலை 1.26 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தின் கார்கில் நகரில் இருந்து வடகிழக்கே 166 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் லடாக்கின் லே பகுதியில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. எனினும் இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All