Search

Rebecca

Nov 25, 2025

உலகம்

உலகின் சொகுசு நகரங்கள் பட்டியல்

2025ஆம் ஆண்டின் உலகின் முதல் 10 ஆடம்பர நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஆடம்பரம் என்பது செல்வத்தை மட்டுமே குறிக்கவில்லை. நீங்கள் அதை எங்கு செலவிடுகிறீர்கள், எப்படி அனுபவிக்கிறீர்கள், அது உங்களுக்கு வழங்கும் வாழ்க்கை முறை ஆகியவற்றைக் குறிக்கிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலின் முதலிடத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளது. கிட்டத்தட்ட 900 சிறந்த உணவு விடுதிகள் உள்பட சுமார் 150 விருந்தகங்கள் அந்த நகரை முதலிடத்தில் வைத்துள்ளன.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்கவைத்தது. இங்கு 279 உயர்தர உணவகங்கள், 125 சொகுசு விருந்தகங்கள் இரண்டாவது இடத்தில் வைத்துள்ளன. சுமார் 94,000 லட்சாதிபதிகள் மெல்போர்னை தங்கள் வீடாகக் கொண்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் சூரிச் 3வது இடமும், மியாமி 4வது இடத்தையும், நியூயார்க் 5வது இடத்தையும் பிடித்துள்ளன.

லாஸ் ஏஞ்சல்ஸ், மிலன், சிங்கப்பூர், சியோல் மற்றும் லண்டன் ஆகிய நகரங்கள் 6 முதல் 10 வரையிலான இடத்தைப்பிடித்துள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp