Search

Nov 10, 2025

உள்ளூர்

அஸ்வெசும தகவல்களை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பம்

அஸ்வெசும வருடாந்த தகவல்களை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி சபை தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டில் அஸ்வெசும கொடுப்பனவிற்கென முதற்தடவையாக பதிவு செய்யப்பட்டு தற்போது பிரதிபலனை பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் இந்த புதுப்பித்தல் செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்படுவார்கள் என சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மீள தகவல்களை உறுதி செய்யும் போது குடும்ப உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் செயற்பாட்டிலுள்ள கையடக்க தொலைபேசி இலக்கம் போன்ற தகவல்கள் இருப்பது கட்டாயமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All