Search

Rebecca

Nov 4, 2025

உள்ளூர்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் மோதர தேவாலய குழுவின் தலைவர் எனவும் 56 வயதுடையவர் என குறிப்பிடப்படுகிறது.

வெள்ளை நிற கார் ஒன்றில் வருகை தந்த சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கரந்தெனிய - எகொடவெல சந்தியில் சந்தேகநபர்களால் கைவிடப்பட்ட நிலையில் குறித்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பின்னர் பெங்வல-எகொடவெல வழியாக பயணித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All