Search

Sep 18, 2025

உள்ளூர்

கடலில் மிதந்த கேரள கஞ்சா பொதிகள் மீட்பு.

யாழ் - மாமுனை கடல் பகுதிகளில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, கடல் பகுதிகளில் மிதந்து கொண்டிருந்த முப்பத்து மூன்று (33) கிலோகிராமை விட அதிகமான (ஈரமான எடை) கேரள கஞ்சாவினை கடற்படையினர் கைப்பற்றினர்.

கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு ஏழு (07) மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறதுடன்,மேலும் கடற்படையின் நடவடிக்கைகளின் போது கரைக்கு கொண்டு வர முடியாமல் கடத்தல்காரர்களால் கடலில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்திடமும் ஒப்படைக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All