Search

Sep 25, 2025

உள்ளூர்

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நாட்டில் செப்டம்பர் மாதத்தில் இதுவரை மொத்தம் 111,823 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.

- இந்தியாவில் இருந்து மொத்தம் 32,570 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது 29.1% ஆகும்.

- ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,021 பேர்

- ஜெர்மனியிலிருந்து 6,994 பேர்.

- சீனாவிலிருந்து 6,316 பேர் மற்றும் அவுஸ்ரேலியா நாட்டினர் 6,097 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கிடையில், செப்டம்பர் மாதத்திற்கான சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,678,346 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில், இந்தியாவிலிருந்து 358,165 பேர், இங்கிலாந்திலிருந்து 159,162 பேர் மற்றும் ரஷ்யாவிலிருந்து 121,116 பேர் என்று SLTDA அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All