Search

Sep 4, 2025

உள்ளூர்

வெயாங்கொடையில் அதிர்ச்சி: எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு.

வெயாங்கொடை - நைவல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு அருகில் பையொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் 4 மனித மண்டை ஓடுகள் மற்றும் பல எலும்புத் துண்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

வீட்டின் கேரேஜை ஒட்டிய ஒரு அறையில் கிராம அலுவலர் அலுவலகம் அமைந்திருந்தது. கிராம அலுவலர், எலும்புக்கூடுகள் அடங்கிய பையைக் கவனித்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், அடையாளம் தெரியாத யாரோ ஒருவர் 4 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புத் துண்டுகளை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All