Search

Oct 25, 2025

உள்ளூர்

நாட்டில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை.

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த பிரதேசங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிள், மேற்கு, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும், அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மேலும், வளிமண்டலவியல் திணைக்களம் இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All