Search

Sep 8, 2025

உள்ளூர்

கொழும்பு கிராண்ட்பாஸ் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

கொழும்பு - கிராண்ட்பாஸ், மஹவத்த மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவியதாக கூறப்படும் இருவரை கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 31 மற்றும் 32 வயதுடைய கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதேவேளை கடந்த மே மாதம் 30ஆம் திகதி பெரியநீலாவணை பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று(07) வேன் மற்றும் உந்துருளியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All