Search

Oct 14, 2025

உள்ளூர்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு - மழையால் தாமதம்.

யாழ் - செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு இன்று (14) காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பின்னர், நீதவான் உள்ளிட்ட குழுவினர் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி பகுதியைப் பார்வையிட்டனர்.

தொடர்ச்சியாக மழை பெய்யுமானால், இந்த இடத்தில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்வது மிகவும் சிரமமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த வழக்கு மீண்டும் திறந்த நீதிமன்றத்தில் எதிர்வரும் நவம்பர் 3ம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகளுக்கு அமைச்சால் நிதி வழங்கப்பட்டும், தொடர்ச்சியான மழையால் அகழாய்வுப் பணிகள் தாமதமடைந்துள்ளன.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All