Search

Oct 4, 2025

உள்ளூர்

மின்சாரக் கட்டண உயர்வு - இம் மாத இறுதிக்குள் PUCSL முடிவு.

இலங்கை மின்சார சபை (CEB) முன்வைத்த 6.8% மின்சாரக் கட்டண உயர்வு குறித்த முடிவை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) இந்த மாதத்தின் இரண்டாவது வார இறுதிக்குள் அறிவிக்கப்படவுள்ளது.

CEB கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த உயர்வை கோரி முன்மொழிவு சமர்ப்பித்திருந்தது.

அதற்கமைய, கிழக்கு மாகாணத்தில் செப்டம்பர் 18 அன்று பொதுமக்களிடம் வாய்மூல கருத்து பெறும் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டது. நாட்டின் 8 மாகாணங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இறுதி கருத்து பெறும் அமர்வு அக்டோபர் 8ஆம் தேதி மேல் மாகாணத்தில் நடைபெற உள்ளது.

PUCSL தற்போது மின்சார சபையின் எரிபொருள், உற்பத்தி, விநியோகம் மற்றும் கடன் செலவுகளை ஆய்வு செய்து வருகிறது. இதன் பின்னர், மின்சாரக் கட்டண திருத்தம் குறித்த இறுதி அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All