Jino
Sep 19, 2025
விளையாட்டு
ஆப்கானை வீழ்த்தியது இலங்கை - சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி.
ஆசிய கிண்ண இருபதுக்கு T20 போட்டியில், அபுதாபியில் நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
> முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில்,
- Mohammad Nabi அதிரடியாக துடுப்பாடி இறுதி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடங்களாக 60 ஓட்டங்களையும்,
- அணியின் தலைவர் Rashid Khan மற்றும் Ibrahim Zadran தலா 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
> பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில்,
- Nuwan Thushara 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
170 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி' 18.4 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்துள்ளது.
> இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில்,
- Kusal Mendis ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும்,
- Kusal Perera 28 ஓட்டங்களையும், Kamindu Mendis ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதற்கமைய ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் குழு B யிலிருந்து இலங்கை அணியும், பங்களாதேஷ் அணியும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All