Search

Sep 22, 2025

உள்ளூர்

சஜின் வாஸ் குணவர்தனவுவிற்கு நீதிமன்றின் உத்தரவு.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ரூபாய் 369 இலட்சத்திற்கும் அதிக வருமான வரியை செலுத்தாமைக்கு உண்மையான காரணம் ஏதாவது இருப்பின் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதிக்கு முன்னர் எழுத்து மூலமாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிடப்பட்டுள்ளது.

2010, 2011,2012 ஆண்டுகளில் ரூ.36,975,959 தனிநபர் வருமான வரி செலுத்தாமைக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக தேசிய இறைவரித் திணைக்களம் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All