Search

Oct 22, 2025

உள்ளூர்

கொழும்பு - மன்னார் சொகுசு பேருந்து விபத்து.

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று மன்னார் மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் இன்று புதன்கிழமை விபத்துக்குள்ளானது.

பரைய நாளன் குளம் பொலிஸ் பிரிவில் குறித்த விபத்து .இடம்பெற்றுள்ள தோடு, சாரதியின் நித்திரை கலக்கத்தில் குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மன்னார் முருங்கன் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All