Search

Oct 14, 2025

உள்ளூர்

சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் - பிரதமர் ஹரிணி சந்திப்பு.

சீனா விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய பீஜிங்கில் அமைந்துள்ள சீன தேசிய மாநாட்டு மையத்தில் (CNCC) நடைபெற்ற உலகத் தலைவர்களின் பெண்கள் பற்றிய மாநாடு 2025 இல் கலந்துகொண்டார்.

இந்நிலையில் இன்று (14) பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் (People's Great Hall) இலங்கைப் பிரதமர் கலாநிதி கலாநிதி ஹரிணி அமரசூரியாவை சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் சந்தித்துள்ளார்.

சீனா - இலங்கை நீண்டகால பாரம்பரிய நட்பைக் கொண்டுள்ள நிலையில், அமைதி மற்றும் சகவாழ்வு என்ற ஐந்து அம்சக் கொள்கையின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளைத் தொடர்ந்து வளர்த்து வருகின்றன என்று ஜி ஜின்பிங் தெரிவித்தார்.

மேலும், இது பல்வேறு நாடுகளுக்கு இடையே நட்புரீதியான நடத்தை மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சீனா அதன் அண்டை நாடுகளுடனான இராஜதந்திரத்தில் இலங்கைக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்று சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All