Search

Sep 8, 2025

உள்ளூர்

மட்டக்களப்பில் சமாதான செயற்பாட்டாளர்களுக்கான பயிற்சிநெறி

“அமைதியைக் கட்டியெழுப்புதலும் சமூக ஒருங்கிணைவும்” எனும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, தெரிவு செய்யப்பட்ட சமாதானச் செயற்பாட்டாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு தன்னாமுனை மியானி பயிற்சி நிலையத்தில் மூன்று நாள் வதிவிடப் பயிற்சிநெறி செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அனுசரணையில் தேசிய மட்டத்தில் சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய வலையமைப்பை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளின் முனைப்பாக குறித்த பயிற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் 25 சமூக சமாதான செயற்பாட்டாளர்கள் உட்பட் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் திட்ட வளவாளர் எஸ்.திலீபன், திட்ட சிரேஷ்ட இணைப்பாளர். ஐ.சுதாவாசன், உட்பட தந்தை செல்வா அறக்கட்டளையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பரந்துபட்ட அளவில் சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகளின் ஓரங்கமாக இந்த பயிற்சி நெறி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All