Search

Oct 22, 2025

உள்ளூர்

நீதிமன்ற விசாரணைகள் தொடர்பான காட்சிகள் வெளியீடு தடை !

நாட்டில் நடைபெறும் மற்றும் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நீதிமன்ற வழக்குகள், விசாரணைகள், அல்லது தடைசெய்யப்பட்ட விசாரணைகளுக்குரிய புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் போன்றவை ஊடகங்களில் வெளியிடப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இத்தடை விதிமுறைகளை மீறி ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களில் சிசிடிவி காட்சிகள் அல்லது தொடர்புடைய காணொளிகள் வெளியிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் தகவல் வெளியிட்டவர்கள், ஊடக நிறுவனங்கள் குற்றவாளிகளாகக் கருதப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் திரிபுபடுத்தப்பட்ட உள்ளடக்கங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பயன்படுத்தப்படலாம் என்றும், இவற்றின் சட்டபூர்வ பின்விளைவுகள் பற்றி ஊடகங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்குப்புறம்பாக, அரசியலமைப்பால் உறுதிசெய்யப்பட்ட குடிமகனின் அடிப்படை உரிமைகள் மீறப்படக்கூடாது என்பதையும் பொலிஸ் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All