Search

Sep 6, 2025

உள்ளூர்

எல்ல கோர விபத்து - மஹிந்த இரங்கல்.

எல்ல - வெல்லவாய பேருந்து கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

- தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,

2025 செப்டம்பர் 4 ஆம் திகதி இரவு எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்து குறித்து அறிந்து நான் மிகுந்த அதிர்ச்சி மற்றும் வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளேன்.

இந்த துயர சம்பவத்தில், தங்காலை நகர சபையின் செயலாளர் திரு. டி.டபிள்யூ.கே. ரூபசேன அவர்களுடன் மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து, குறிப்பாக என் சொந்த ஊரான தங்காலை மக்களுக்கு பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ் கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் முழுமையாகக் குணமடைய என் மனமார்ந்த பிராத்தனைகளை தெரிவிக்கிறேன்.

இந்த கடினமான சூழ்நிலையில், ஆபத்தான நிலைமையிலும் அஞ்சாமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட எல்ல பிரதேசவாசிகள், பொலிஸ், இராணுவம், விமானப்படை, தீயணைப்பு படை மற்றும் வைத்திய நிபுணர்கள் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் பாலித ராஜபக்ஷ மற்றும் அவரது மருத்துவக் குழுவினரின் சேவையையும் இச்சமயத்தில் உயர்ந்து பாராட்டுகிறேன்.

இத்தகைய துயர சம்பவங்கள் இனி ஒருபோதும் நிகழாதிருக்க வேண்டும். என்பதே என் உள்ளார்ந்த பிரார்த்தனை.

என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All