Search

Oct 30, 2025

உள்ளூர்

1 வீத வரி சுற்றுலா விடுதிகளுக்கு அமுல்படுத்தப்பட்டது. #Video

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்திக்கு குழு கூட்டமானது இன்றையதினம் 30 வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் இடம்பெற்றது.

பாசிக்குடா பகுதியில் இராணுவத்தினால் எந்தவித அனுமதியும் இன்றி இயங்கி வரும் வியாபார நிலையத்தினால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றமையை இன்றைய அபிவிருத்தி குழு கூட்டத்தில் பா.உ இராசமாணிக்கம் சாணக்கியனால் கவனத்தில் கொண்டு வரப்பட்டது. அதற்கமைய அனுமதி இன்றி இயங்கும் வியாபார நிலையத்தை அப்பகுதி மக்களுக்கு வழங்கும்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான நிதியீட்டல் மூலமான சுற்றுலா விடுதிகளை ஒழுங்குபடுத்தும் செயற்திட்டம் மூலம் சுற்றுலா விடுதி களுக்கான வரி அறவீடுகள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டு ஒரு வீதம் வரி அமுல்படுத்தப்பட்டது

கிண்ணையடி சுங்காங்கேணி பகுதியைச் சேர்ந்த முதியோர் கொடுப்பனவை பெறுபவர்கள் இதுவரை காலமும் சிரமத்தின் மத்தியில் தங்களுடைய கொடுப்பனவை வாழைச்சேனை சென்று பெற்று வந்தார்கள் அவர்கள் தங்களுடைய கிராமங்களில் கொடுப்பனங்களை பெற்றுக் கொள்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All