Search

Oct 13, 2025

உலகம்

கரூர் துயர் சம்பவம் - சி.பி.ஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

தமிழ்நாடு - கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், பொலிஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

இவ் வழக்கில், எதிர்மனுதாரராக சேர்க்கப்படாத த.வெ.க தலைவர் விஜய் பற்றி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெளியிட்ட கருத்துகளையும் நீக்கக் கோரி, த.வெ.க சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கில், த.வெ.க தரப்பு வாதங்களை ஏற்று, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவையும் அமைத்துள்ளது.

மேலும், மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த விவகாரமாக இதைக் கருதுவதாகவும், நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை மக்களின் உரிமை என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All