Rebecca
Sep 3, 2025
பல்சுவை
சனம் செட்டியின் காணொளி வைரல்
நடிகை சனம் செட்டி, வேட்டி கட்டி அழகுப் பார்க்கும் காணொளியொன்று இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் நடிகை சனம் செட்டி. இதனை தொடர்ந்து, மாயை, விலாசம், கதம் கதம், கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த 2016ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இவர், பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான மகா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரை ரியாலிட்டி ஷோ-களிலும் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், கடந்த 2020ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 63 நாட்கள் வரை விளையாடினார்.
வெளியில் வந்த பின்னர், சக போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றினார் என கூறி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சனம் செட்டி அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் எழும் சர்ச்சையான பிரச்சினைகளை எடுத்து பேசி, காணொளி பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில், சனம் செட்டி வேட்டி கட்டி வெளியிட்ட காணொளி தற்போது இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. காணொளியை பார்த்த நெட்டிசன்கள், “ இப்படியொரு ஆசையா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக கூறப்படுகிறது.
https://www.instagram.com/reel/DOBTK-FEVyB/?utm_source=ig_embed&ig_rid=b73fecf0-5637-407d-b2cc-f0c1762918f9
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
Related News
View All