Jino
Sep 25, 2025
விளையாட்டு
அசத்தல் வெற்றியோடு இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி.
2025 ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
நேற்று (24) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் 4 சுற்று போட்டியில், பங்களாதேஷ் அணியை 41 ஓட்டஙக்ள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 17 வது ஆசிய கிண்ணத்தின் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.
> இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில்,
- அதிரடி மன்னன் Abhishek Sharma 75 ஓட்டங்களை அதிரடியாக பெற்றார்.
- Hardik Pandya 38 ஓட்டங்களையும்,
- Shubman Gill 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
> பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில்,
- Rishad Hossain 2 விக்கெட்டுக்களை, Tanzim Hasan Sakib,Mustafizur Rahman தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இந்திய அணி நிர்ணயித்த 170 என்ற வெற்றியிலக்கை நோக்கி துப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 127 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து தோல்வியை சந்தித்தது.
> பங்களாதேஷ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில்'
- Saif Hassan அதிகபட்சமாக 69 ஓட்டங்களை பெற்றார்.
> இந்திய அணியின் பந்துவீச்சில்,
- Kuldeep Yadav 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார், Jasprit Bumrah, Varun Chakaravarthy தலா இவ்விரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்திய அணியின் இவ் வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இதேவேளை, பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வியால் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
மேலும், இன்று (25) பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறவுள்ள சூப்பர் 4 போட்டியில் வெற்றி பெறும் அணி, இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All