Search

Jino

Sep 23, 2025

விளையாட்டு

இலங்கை - பாகிஸ்தான் இன்று களம்.

ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இன்றைய (23) போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் அபுதாபி சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளன.

சூப்பர் 4 சுற்றில் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த இலங்கை அணி இப் போட்டியில் வென்றே ஆகவேண்டிய நிலையில் களமிறங்கவுள்ளது.

- இன்றைய போட்டி தொடர்பில் இலங்கை அனித்தலைவர் சரித் அசலங்க தெரிவிக்கையில்,

"நாங்கள் இன்னும் பதினொருவர் கொண்ட அணியை உறுதி செய்யவில்லை. தொடர்ந்தும் கலந்துரையாடி வருகின்றோம். ஆனால் மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது நிறைய இடது கை வீரர்கள் உள்ளனர். எனவே ஒரு சுழற்பந்து வீச்சாளரில் நிச்சயமாக மாற்றம் இருக்கலாம். அத்துடன் நாங்கள் இன்னும் ஒரு மேலதிக பந்துவீச்சு சகலதுறை வீரரை இணைப்பது குறித்து கவனம் செலுத்தி வருகின்றோம்.

சில நேரங்களில் நாங்கள் நான்கு பந்துவீச்சாளர்களுடன் சென்று நிலைமையை சமாளிப்பதில் கொஞ்சம் சிரமம் உள்ளது. அதனால் ஒரு மேலதிக பந்துவீச்சு சகலதுறை வீரர் இருந்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். அத்துடன் தொடர்ச்சியாக 4 இடது கை வீரர்கள் இருப்பது ஏனைய அணியினருக்கும் சாதகத்தை ஏற்படுத்தும் என இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp