Search

Sep 13, 2025

விளையாட்டு

ஓமன் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி.

2025 ஆசிய கோப்பை 4வது போட்டியாக நேற்று 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் - ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டை தெரிவு செய்யத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்தது.

- பாகிஸ்தான் அணி சார்பில், முகமது ஹாரிஸ் 43 பந்துகளில் 66 ஓட்டங்கள், சாஹிப்சாதா ஃபர்ஹான் 29 , ஃபக்கர் ஜமான் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்கள் ஹசன் நவாஸ் 09 ஓட்டங்களை பெற்றனர்.

- ஓமன் அணி பந்து வீச்சில், ஷா பைசல் மற்றும் ஆமிர் கலீம் தலா 03 விக்கெட்டுகளையும், முகமது நதீம் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

161 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஓமன் அணி 16.4 ஓவர்களில் 67 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

- ஓமான் அணி சார்பில், ஆமிர் கலீம் 13 ஓட்டங்கள், , ஹம்மத் மிர்சா 27 ஓட்டங்களை மாத்திரமே அதிக பட்சமாக எடுத்தார்கள்.

- பாகிஸ்தான் அணி பந்துவீச்சில், சைம் அயூப், சுஃபியான் முகீம், ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp