Search

Jino

Sep 26, 2025

விளையாட்டு

பங்களாதேஷை வென்றது பாகிஸ்தான் - இறுதிப்போட்டிக்கு தகுதி.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் - 4 சுற்றில் டுபாயில் நேற்று இடம்பெற்ற பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றது.

> துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில்,

- Mohammad Haris 31 ஓட்டங்களையும்,

- Mohammad Nawaz 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

> பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில்,

Taskin Ahmed 03 விக்கெட்டுக்களையும், Mahedi Hasan, Rishad Hossain ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதற்கமைய 136 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோல்வியை சந்தித்தது.

> துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில்,

- Shamim Hossain மாத்திரமே அதிகட்சமாக 30 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

> பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில்,

- Shaheen Shah Afridi மற்றும் Haris Rauf ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதன்படி பாகிஸ்தான் அணி 11 ஓட்டங்களால் வெற்றிப்பெற்று 2025 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு இரண்டாவது அணியாக பாகிஸ்தான் அணி தகுதிப் பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக இந்திய அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, வருகின்ற 28 ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமாக இடம்பெறவுள்ள ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp