Jino
Sep 29, 2025
விளையாட்டு
ஆசிய கிண்ணத்தை வென்றது இந்தியா.
17-வது ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.
> துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில்,
- Sahibzada Farhan அதிகபட்சமாக 57 ஓட்டங்களையும்,
- Fakhar Zaman 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
> இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் Kuldeep Yadav 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதற்கமைய 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
> துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில்,
- அதிரடியாக துடுப்பெடுத்தாடிய Tilak Varma ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 69 ஓட்டங்களையும்,
- Shivam Dube 33 ஓட்டங்களை பெற்றக்கொடுத்தனர்.
> பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Faheem Ashraf 03 விக்கெட்டிக்களை வீழ்த்தினார்.
17 வது ஆசியக்கிண்ணத்தின் இவ் வெற்றியுடன் இந்திய அணி 09வது முறையாகவும் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All