Search

Sep 24, 2025

உள்ளூர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் - இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சந்திப்பு.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பு குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயம் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இந்தியாவின் உதவியோடு மேற்கொள்ளப்படும் பொருளாதார திட்டங்கள், மற்றும் பிராந்தியம் தொடர்பான அரசியல் முன்னேற்றங்கள் என்பன இச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச் சந்திப்பில் பாரளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், தலைவர் சிறீதரன், சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All