Search

Sep 22, 2025

உள்ளூர்

போலி நாணயத்தாளுடன் இளைஞர் ஒருவர் கைது

அநுராதபுரம் - ஹபரணை பிரதேசத்தில் 1000 ரூபாய் போலி நாணயத்தாளுடன் இளைஞனொருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர், கைதுசெய்யப்பட்ட இளைஞன் நாளை செவ்வாய்கிழமை கெக்கிராவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


ஹபரணை பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இளைஞன் ஒருவர் போலி நாணயத்தாள் ஒன்றை மாற்ற முயன்றதாக ஹபரணை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞனை கைதுசெய்துள்ளனர்.


குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All