Jino
Sep 27, 2025
விளையாட்டு
இலங்கையை வீழ்த்திய இந்திய அணி - சூப்பர் ஓவரில் அதிரடி வெற்றி !
2025 ஆசிய கிண்ண டி20 போட்டித் தொடரில் சூப்பர் 4 சுற்றின் இறுதி போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதின மிகுந்த விறுப்பாக நடைபெற்ற போட்டியில் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
> இந்திய அணி சார்பில்,
- அபிஷேக் சர்மா அதிகபட்சமாக 61 ஓட்டங்களையும்,
- திலக் வர்மா ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
> இலங்கை அணி பந்து வீச்சில்,
- மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க, தசுன் சானக்க மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.
அதன்படி, பதிலுக்கு 203 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை 202 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி சமனிலையில் நிறைவடைந்தது.
> இலங்கை அணி சார்பில்,
- அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸங்க 107 ஓட்டங்களைப் பெற்று இறுதியாக ஆட்டமிழந்தார்.
- குசல் ஜனித் பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
போட்டி சூப்பர் ஓவருக்கு சென்ற நிலையில்,அதன்படி, சூப்பர் ஓவரில் முதலில் களம் புகுந்த இலங்கை அணி 02 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி 03 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றிப் பெற்றது.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All