
janani
Jul 15, 2026
உள்ளூர்
இன்றைய வானிலை நிலவரம்!

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (15) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின்படி, நாட்டின் சில பகுதிகளில் சிறியளவிலான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், அத்துடன் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் (Heat Index) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






