Search

Rebecca

Jan 6, 2026

உள்ளூர்

இவ்வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!

இவ்வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று(06) ஆரம்பமாகியது.

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் ஆரம்பமான இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளாவன,

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.

மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.

மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.

மு.ப. 11.30 - பி.ப. 3.30 (i) கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது.

(ii) கடற்றொழிலாளர் ஓய்வூதிய, சமூகப் பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது.

பி.ப. 3.30 - பி.ப. 5.30 பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரேரணை – அங்கீகரிக்கப்படவுள்ளது.

பி.ப. 5.30 மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தோ்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவொன்றினை நியமிப்பதற்கான பிரேரணை – அங்கீகரிக்கப்படவுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All