Search

sasi

Dec 25, 2025

உள்ளூர்

வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

நேற்று புதன்கிழமை (24) எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி - அவிசாவளை வீதியின் மஹிங்கொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரியிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்திசையில் வந்த தனியார் பஸ்ஸூடன் மோதியதில் இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருவரும் குழந்தையொன்றும் பலத்த காயமடைந்து, எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் எஹெலியகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All