Search

sasi

Dec 24, 2025

உலகம்

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விற்பனை

பல ஆண்டுகளாக நிதி நெருக்கடியைக் கடந்த Pakistan International Airlines (PIA) நிறுவனத்தின் 75% பங்குகளை விற்பனை செய்ய பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னணி வணிகக் குழுமங்களில் ஒன்றான அரிஃப் ஹபீப் குழுமம் (Arif Habib Group) இந்த ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது. உயர்ந்த ஏலம் பாகிஸ்தான் ரூபாய் 135 பில்லியன் (சுமார் டொலர் 482 மில்லியன்) ஆகும்.

இந்த ஒப்பந்தத்தின் பின்னர், விமான சேவையின் 75% பங்குகள் அரிஃப் ஹபீப் குழுமத்திற்கு, மீதமுள்ள 25% பங்குகள் அரசிடம் தொடரும்.

பல ஆண்டுகளாக கடன் சுமை, செயலற்ற நிர்வாகம் மற்றும் அரசியல் தலையீடுகள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய உரிமையாளர்களின் கீழ், விமான சேவை நிர்வாகம் சீரமைக்கப்பட்டு மீண்டும் இலாபகரமான நிலையில் கொண்டு வருவதே குறிக்கோள்.

சட்ட மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகள் முடிந்ததும், நிர்வாகக் கட்டுப்பாடு அதிகாரபூர்வமாக புதிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All