Search

sasi

Dec 25, 2025

உள்ளூர்

ஹக்கள தாவரவியல் பூங்கா இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

'டித்வா' சூறாவளி நிலைமை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஹக்கள தேசிய தாவரவியல் பூங்கா, இன்று (25) முதல் மீண்டும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்காக திறக்கப்படவுள்ளது.

அதன்படி, தேசிய கட்டிட ஆய்வு மையம் (NBRO) மற்றும் அனர்த்த மேலாண்மை மையம் வழங்கிய தொழில்நுட்ப பரிந்துரைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே பூங்கா திறக்கப்படவுள்ளதாக அங்கு பொறுப்பிலுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு காரணங்களால் பூங்காவின் சில பகுதிகளுக்கு தற்காலிகமாக நுழைவு தடை செய்யப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதிகள் அபாயகரமானவை என்பதை சுட்டிக்காட்டும் அறிவிப்பு பலகைகளால் பிரிக்கப்பட்டுள்ளன.

இவ்விடங்களைத் தவிர, பூங்காவின் ஏனைய அனைத்து பகுதிகளும் பார்வையாளர்களுக்காக திறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளி நிலைமை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஹக்கள தேசிய தாவரவியல் பூங்கா, இன்று (25) முதல் மீண்டும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய கட்டிட ஆய்வு மையம் (NBRO) மற்றும் அனர்த்த மேலாண்மை மையம் வழங்கிய தொழில்நுட்ப பரிந்துரைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே பூங்கா திறக்கப்பட்டுள்ளதாக அங்கு பொறுப்பிலுள்ள அதிகாரி தெரிவித்தார்.

பாதுகாப்பு காரணங்களால் பூங்காவின் சில பகுதிகளுக்கு தற்காலிகமாக நுழைவு தடை செய்யப்பட்டுள்ளது, பூங்காவின் ஏனைய அனைத்து பகுதிகளும் பார்வையாளர்களுக்காக திறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All