Rizi
Sep 28, 2025
விளையாட்டு
ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி இந்தியா - பாகிஸ்தான்
2025 ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான மோதலானது அதிக எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.
1984 முதல் நடைபெற்றுவரும் ஆசியக் கிண்ண வரலாற்றில் இதுவரை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டதே இல்லை.
ஆனால் 1986 ஆஸ்ட்ரல்-ஆசிய கிண்ண மோதலின் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. அதில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது.
அதேபோல 1994 ஆஸ்ட்ரல்-ஆசிய கிண்ண இறுதிப்போட்டியிலும் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது பாகிஸ்தான்.
கடைசியாக இரு அணிகளும் மோதிக்கொண்ட 2017 சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இந்திய அணியை பொறுத்தவரை 1985 உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியை பதிவுசெய்தது.
அதுபோல 2007 டி20 உலகக் கிண்ணம் இறுதிப்போட்டியில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
1985 முதலான 40 வருட கிரிக்கெட் வரலாற்றில் 5 முறை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதியுள்ள நிலையில், அதில் பாகிஸ்தான் அணி 3-2 என முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All